ADDED : அக் 03, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த, 34 போலீசாரை கமிஷனர் இடமாற்றம் செய்தார்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நுண்ணறிவு பிரிவு, திருமுருகன்பூண்டி, வடக்கு, நல்லுார், தெற்கு, சென்ட்ரல், அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்களை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., முதல் போலீஸ் ஏட்டு வரை, 25 பேரும், மாநகர ஆயுதப்படையில் இருந்து, எட்டு பேரும், கே.வி.ஆர்., நகர் மற்றும் கொங்கு நகர் போக்குவரத்து ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டனர்.
மாநகர எஸ்.பி.சி.ஐ.டி., பிரிவில் இருந்து, மாநகரத்துக்கு ஒருவர் என, மொத்தம், 34 பேரை போலீஸ் கமிஷனர் லட்சுமி இடமாற்றம்செய்து உத்தரவிட்டார்.

