/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 லட்சம் பேர் வெளியூர் பயணிக்க வாய்ப்பு
/
4 லட்சம் பேர் வெளியூர் பயணிக்க வாய்ப்பு
ADDED : அக் 26, 2024 10:56 PM
திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 29, 30ம் தேதி இரு நாட்களில், திருப்பூரில் இருந்து நான்கு லட்சம் பேர் பஸ், ரயில் மூலம் வெளியூர் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயிலில் முன்பதிவில்லா டிக்கெட் பெற வேண்டும் என்றால், பயணம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஸ்டேஷன் சென்று விடுவது நல்லது.
தீபாவளிக்கு முன்கூட்டியே சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் விரிவாக திட்டமிட வேண்டும். அதாவது, 29ம் தேதி இரவு முதல், 30ம் தேதி காலை வரை சிறப்பு பஸ் எண்ணிக்கையை கூட்டத்துக்கு ஏற்ப இயக்க வேண்டும். 30ம் தேதி மதியத்துக்கு பின், இரவு, நள்ளிரவு வரை கூடுதல் பஸ்களை டிப்போவில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
நீண்ட துாரம், விடிய விடிய பஸ் இயக்கி வரும் டிரைவர்களுக்கு தக்க ஓய்வும் தர வேண்டியது அவசியம்.