ADDED : டிச 26, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சி, அய்யன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள், 66. தனது தோட்டத்தில், ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை அவிநாசியில் உள்ள உறவினரை பார்க்க வந்துவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு சென்ற போது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆடுகளை, தெரு நாய்கள் கடித்து குதறி கொன்றது தெரியவந்தது.
அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், அய்யன்காட்டுக்கு சென்று பலியான ஆட்டுக்குட்டிகளை, பார்வையிட்டு விசாரணை செய்தார். அவர் கூறுகையில், 'நாய்கள் கடித்து இறந்த ஆடுகள் குறித்து, தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பப்படும்,' என்றார்.

