/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவி ஓட்டிய டூவீலர் மோதி துாய்மைப்பணியாளர் பலி
/
மாணவி ஓட்டிய டூவீலர் மோதி துாய்மைப்பணியாளர் பலி
ADDED : டிச 26, 2025 06:29 AM
திருப்பூர்: திருப்பூரில், மாணவி ஓட்டிய டூவீலர் மோதியதில், ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
திருப்பூர், வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி, 47. பனியன் நிறுவனத்தில், துாய்மை பணியாளர்.
நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்றபோது, சிறுமி ஒருவர் ஓட்டி வந்த டூவீலர் அம்மாசி மீது மோதியது. இதில், அம்மாசி பலியானார். டூவீலர் ஓட்டிய சிறுமி மற்றும் அவருடன் வந்த மற்றொரு சிறுமிக்கும் காயமேற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர்போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 17 வயதுள்ள இரு சிறுமியரும், தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படித்து வருவது தெரிந்தது.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

