/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வார விடுமுறை தினம் 40 சிறப்பு பஸ் இயக்கம்
/
வார விடுமுறை தினம் 40 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மார் 22, 2025 07:01 AM
திருப்பூர் : 'வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும், நாளையும், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தொடர் விடுமுறை தினங்கள் குறைவு என்ற காரணத்தால், இம்மாத துவக்கம் முதல் வாராந்திர சிறப்பு பஸ்களில் கூட்டம் குறைவாகவே உள்ளது. அதற்கேற்ப குறைந்தளவு பஸ்களே இயக்கப் படுகிறது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'இன்றும், நாளையும் கோவில் வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பத்து என, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நடப்பு வாரம் முகூர்த்தம், விசேஷ தினங்கள் இல்லாததால், பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருக்கும்,' என்றனர்.