sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

40 ஆயிரம் மரக்கன்று! நடப்பாண்டு நடுவதற்கு திட்டம்: தயார் நிலையில் வனத்துறை

/

40 ஆயிரம் மரக்கன்று! நடப்பாண்டு நடுவதற்கு திட்டம்: தயார் நிலையில் வனத்துறை

40 ஆயிரம் மரக்கன்று! நடப்பாண்டு நடுவதற்கு திட்டம்: தயார் நிலையில் வனத்துறை

40 ஆயிரம் மரக்கன்று! நடப்பாண்டு நடுவதற்கு திட்டம்: தயார் நிலையில் வனத்துறை

1


ADDED : மே 07, 2025 08:34 AM

Google News

ADDED : மே 07, 2025 08:34 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில், 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட, வனத்துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை சார்பில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகளை நட்டு கொடுக்கும் திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டம் முழுக்க, 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நட்டும் கொடுக்கப்பட்டன.

இதில், திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்டு, திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி மற்றும் பல்லடம் தாலுகாக்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. நடப்பாண்டு, (2025 - 2026) திருப்பூர் வனச்சரகத்தில், 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''மரக்கன்று நடும் திட்டத்தில் விவசாய நிலம், தொழிற்சாலை வளாகம், பள்ளி, கல்லுாரி வளாகங்களில், குழிதோண்டி இலவசமாக நட்டுக் கொடுக்கப்படுகிறது.

மரம் வளர்க்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தால், போதிய தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதை கள ஆய்வின் மூலமாக உறுதி செய்து, தேவையான மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும்.

மகாகனி, தேக்கு, சவுக்கு, மலைவேம்பு, செம்மரம், பலா, சீதா, கொய்யா, நெல்லி மற்றும் வேப்பமரம், புங்கன், வேம்பு, நீர்மருது, மகிழம் உள்ளிட்ட மண்ணுக்கேற்ற நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன,'' என்றார்.

நஞ்சராயன் குளத்தில் நர்சரி!


திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு வசதியாக, நஞ்சராயன் பறவைகள் சரணாலய பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலம் குத்தகைக்கு பெறப்பட்டு, அங்கு நாற்று நர்சரி உருவாக்கவும், வனத்துறையினர் திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பும் கவனிப்பும் அவசியம்

வனத்துறையினர் கூறியதாவது:

தொழில் நகரான திருப்பூரில், பசுமை பரப்பு அதிகரிக்க வனத்துறை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகளவில் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், ஆவலும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. நடப்பாண்டும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. கோடை முடிந்து, பருவமழை துவங்கும்.

அந்த சமயத்தில் மரக்கன்றுகளை நடுவதன் வாயிலாக, அவை செழித்து வளரும். நடப்படும் மரக்கன்றுகள் ஓரளவு வளரும் வரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மரக்கன்றுகளை சுற்றி வைக்கப்படும் இரும்பு வேலிகள், சேதப்படுத்தப்படும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, சாலையோரம் நிழல் தரும் மரங்களை அதிகம் வளர்ப்பது, மாசு தவிர்க்க உதவியாக இருக்கும். தாலுகா அளவில் உள்ள வனத்துறையினருடன், தன்னார்வ அமைப்பினரும் இணைத்து பணியாற்றினால், களப்பணி எளிது.






      Dinamalar
      Follow us