/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; பாதுகாப்பு பணியில் 400 போலீசார்
ADDED : ஏப் 05, 2025 05:56 AM
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 8-ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
குண்டம் தேர்த்திருவிழாவிற்கு திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், சேவூர், கோபி மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால், பாதுகாப்பிற்காக போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் இரண்டு பேர் தலைமையில், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப் இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதபடை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் நான்கு இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
25 சிறப்பு பஸ்கள்
பெருமாநல்லுாருக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ் இயக்குவது தொடர்பான ஆலோசனை, திருப்பூர் காங்கயம் ரோடு, டெப்போ அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மண்டல மேலாளர் (வணிகம்) சிவக்குமார் தலைமை வகித்தார்.
'பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு வெளியே, கிழக்கு மற்றும் மேற்குப்புறம் இரு இடங்களில் பஸ் நிறுத்தம் உருவாக்குவது, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் நிலையத்தில் இருந்து, 25 சிறப்பு பஸ்கள் இயக்குவது; கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, திங்கள் இரவு, செவ்வாய் காலை அவிநாசி, ஊத்துக்குளி, பெருந்துறை பகுதியில் இருந்து பஸ்கள் இயக்குவது,' என முடிவெடுக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் சர்வீஸ் பஸ்கள், 7 மற்றும், 8ம் தேதி பெருமாநல்லுார் சிறப்பு பஸ் ஸ்டாண்டில் கட்டாயம் நின்று செல்ல நடத்துனர்களுக்கு உத்தரவிட கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

