/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமசபை கூட்டத்தில் 41,505 பேர் பங்கேற்பு
/
கிராமசபை கூட்டத்தில் 41,505 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 28, 2024 08:47 PM
உடுமலை;குடியரசு தினத்தன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மதுமிதா, முதலிபாளையம் ஊராட்சி தலைவர் உள்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
பத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மொத்தம் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கிராமசபை கூட்டங்களில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு, ஜல்ஜீவன் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டம், துாய்மை பாரத இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஆண், பெண் மொத்தம் 41,505 பேர் பங்கேற்றனர்.