/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
433 டூவீலர்கள் 12ம் தேதி ஏலம்
/
433 டூவீலர்கள் 12ம் தேதி ஏலம்
ADDED : ஜன 03, 2026 06:11 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாத 433 டூவீலர்கள், ஏலம் விடப்பட உள்ளது.
நல்லுாரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், வரும் 12ம் தேதி காலை, 10:00 மணி முதல் பொது ஏலம் நடைபெறும். ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை, வரும் 9, 10 தேதிகளில், காலை, 10:00முதல் மாலை, 5:00 மணி வரை, ஆயுதப்படை வளாகத்தில் நேரில் வந்து பார்வையிடலாம்.
வாகனங்களை பார்வையிட வரும்போதே, தங்கள் பெயர், முகவரி விவரங்கள் அடங்கிய ஆதார் கார்டு, மூவாயிரம் ரூபாய் ரொக்கமாக சலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முன்வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே, ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்த உடனேயே, ஏலத்தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ரொக்கமாக செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். வாகனத்தை ஏலம் எடுக்காதவர்களுக்கு, முன்வைப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 94981 04755, 94981 78187 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

