/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆவணங்களுடன் வாக்காளர்கள் ஆஜர்
/
ஆவணங்களுடன் வாக்காளர்கள் ஆஜர்
ADDED : ஜன 03, 2026 06:16 AM

திருப்பூர் தெற்கு தொகுதியில், 1,568 வாக்காளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று பகுதி வாரியாக தேர்தல் பிரிவினரிடம் வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
வாக்காளர் ஆவணம் சரிபார்ப்பு பணி நேற்று நல்லுாரில் உள்ள, மாநகராட்சி, 3வது மண்டல அலுவலகத்தில் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னரே பலரும் காத்திருத்தனர். இருப்பினும், 11:00 மணி வரையும் அலுவலர் யாரும் வரவில்லை. இதனால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். யாரும் முறையாக தகவல் அளிக்காமல் சிறிது நேரம் அங்கு சலசலப்பு நிலவியது. நீண்ட நேரத்துக்குப் பின் ஆவணங்கள் பெறும் பணி நடந்தது.
அலுவலர்கள் கூறுகையில், 'ஆவணம் சரி பார்ப்பு பணிக்கு ஓட்டுச் சாவடி பாகம் வாரியாக ஊழியர்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. அவ்வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது,' என்று சமாளித்தனர்.

