/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
/
4.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ADDED : மார் 31, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மதுவிலக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். வளாகத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். பீஹாரை சேர்ந்த ரூபேஷ்குமார், 27 என்பது தெரிந்தது. இவர் வீரபாண்டியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது.
அவர் வைத்திருந்த பேக்கில் சோதனை செய்த போது விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, 4.5 கிலோ கஞ்சா சாக்லேட் இருப்பது தெரிந்தது. வாலிபரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.