/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்
/
ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்
ADDED : டிச 09, 2024 05:08 AM

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது.
சுவாமிக்கு, பல்வேறு பூஜைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நான்காவது வாரமான நேற்று, காலை, 11:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடத்தி, அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது. மாலை, 3:30 மணி வரை அன்னதானம் நடந்தது; 5,000க்கும் அதிகமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர்.
ராமாயண தொடர் சொற்பொழிவை தொடர்ந்து, நேற்று இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று, நம்பியூர் மஞ்சுநாதனின் ஆன்மிகச் சொற்பொழிவும், நாளை, பேராசிரியர் தங்க ரவிசங்கரின், 'அன்பெனும் பிடியுள்' என்ற தலைப்பிலான சொற்பொழிவும், 11ம் தேதி, வருணனி திருச்செந்திலனின், 'நாகூர் அருவருளாலே' என்ற சொற்பொழிவும், 12ம் தேதி கே.ஜி.எஸ்., பள்ளிக் குழந்தைகளின் நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடக்கின்றன.