ADDED : அக் 14, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:ஊதியூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பங்காம்பாளையத்தில் சிலர் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஊதியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைதுள்ளது.
அப்பகுதியில் சென்று போலீசார் சோதனை செய்தனர். சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊதியூரை சேர்ந்த நவீன், 24, ரங்கராஜ், 45, அருணாச்சலம், 37, குப்புசாமி, 45, மூர்த்தி, 30 ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து, 14 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பணத்தையும், இரண்டு சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.