/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 குழந்தைகள் மீட்பு; போலீஸ் நடவடிக்கை
/
5 குழந்தைகள் மீட்பு; போலீஸ் நடவடிக்கை
ADDED : ஏப் 07, 2025 05:42 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி சந்திப்பு சிக்னல் உள்ளிட்ட பிரதான ரோடுகளில் உள்ள சிக்னல் ஆகிய இடங்களில் சிலர் குழந்தைகளை வைத்தும், பெரியவர்கள் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்து வருகின்றனர்.
இத்தகைய குழந்தைகளை மீட்க திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சமூக நலத்துறையினர், சைல்டுலைன் ஆகியோர் முதற்கட்டமாக மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை சோதனை செய்தனர்.
அதில் மூன்று சிறுவர்கள், பெண்களுடன் இருந்த இரண்டு கைக்குழந்தைகள் என, ஐந்து குழந்தைகளை போலீசார் மீட்டனர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.இன்று குழந்தைகள் நலக்குழுமுன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் தேவையான கல்வி வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.