/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 நாள் வறண்ட வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
/
5 நாள் வறண்ட வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
ADDED : ஜன 26, 2025 03:23 AM
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்புண்டு' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும், 29ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவுகிறது.
அதே நேரம், அதிகபட்ச வெப்பநிலை, 29 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல், 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம், 85 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 45 சதவீதம் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
சராசரியாக மணிக்கு, 8 முதல், 15 கி.மீ.,வேகத்தில் காற்று வீசக்கூடும். கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு குளிரால் ஏற்படும் நா வறட்சியை போக்க, போதிய குடிநீர் வழங்க வேண்டும்.
கோமாரி நோய் வராமல் இருக்கவும், உடலின் பிற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும், 200 கிராம் சோடியம் ைஹட்ராக்ைஸட், 10 லி., தண்ணீரில் கலந்து, மாட்டு கொட்டகை மற்றும் மாடு கட்டும் இடங்களிலும் தெளிக்க வேண்டும்.
இரவு நேர வெப்பநிலை குறைந்தது, 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்பதால், கோழி கூடாரத்தின் ஓரங்களில் சாக்கு தொங்கவிட்டு, குளிர் புகாமல் தடுக்க வேண்டும்.இவ்வாறு, குறிப்பிடப்பட்டுள்ளது.

