/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 நாள் வேலை நடைமுறை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
5 நாள் வேலை நடைமுறை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 07:28 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டவுன்ஹால் எதிரே உள்ள யூனியன் வங்கி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கி ஊழியர் சங்கங்களின் கன்வீனர் மனோகரன் தலைமை வகித்தார். வங்கியாளர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வங்கிகளில் தேவையான ஊழியர் மற்றும் அதிகாரிகளை நியமிக்கவேண்டும். வாரம் ஐந்து நாட்கள் வேலை நடைமுறையை அமல்படுத்தவேண்டும். வங்கி ஊழியர் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும். வங்கி ஊழியர்களின் வருமான வரி மற்றும் அனைத்து கூடுதல் வருவாய்க்கும் வரி விதிப்பதை எதிர்க்கிறோம். வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.