ADDED : அக் 25, 2026 02:29 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.
நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும், அங்கிருந்த கிருஷ்ணவேணி, போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், ஹரிகிருஷ்ணன் மத்திய குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த செந்தில்குமார் தெற்கு காவல் நிலையத்துக்கும், தெற்கில் இருந்த கணேஷ்குமார் நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
