/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 போலீஸ் ஸ்டேஷன்கள் மாவட்டத்தில் தரம் உயர்வு
/
5 போலீஸ் ஸ்டேஷன்கள் மாவட்டத்தில் தரம் உயர்வு
ADDED : ஆக 07, 2025 11:08 PM
திருப்பூர்; முதல்வர் ஸ்டாலின், கடந்த ஏப்., மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் போலீஸ் மானிய கோரிக்கையின் போது, 110வது விதியின் கீழ், எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 280 போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், கணியூர், அமராவதி நகர், சேவூர், கொமரலிங்கம், ஊதியூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், தடாகம், கே.ஜி., சாவடி, காருண்யா நகர், செட்டிபாளையம்; கோட்டூர், சுல்தான்பேட்டை, மகாலிங்கபுரம், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்ந்துள்ளன.