/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ்கள் நின்று செல்ல 5 உணவகங்களுக்கு அங்கீகாரம்
/
அரசு பஸ்கள் நின்று செல்ல 5 உணவகங்களுக்கு அங்கீகாரம்
அரசு பஸ்கள் நின்று செல்ல 5 உணவகங்களுக்கு அங்கீகாரம்
அரசு பஸ்கள் நின்று செல்ல 5 உணவகங்களுக்கு அங்கீகாரம்
ADDED : டிச 01, 2024 11:14 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டிய ஓட்டல்களாக போக்குவரத்து கழகம் ஐந்து உணவகங்களை மட்டுமே அங்கீகரித்துள்ள விபரம் இணையதளம் மூலம் வெளியாகியுள்ளது.
ஊத்துக்குளி, வடமுகம் காங்கயம்பாளையத்தில் உள்ள பைரவி ஓட்டல், ஸ்ரீ சாய் சரவண பவன், மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஓட்டல் ஆர்யாஸ், தாராபுரம் - திண்டுக்கல் ரோட்டில் ஓட்டல் கிருஷ்ணபவன், தாராபுரம், ஆச்சியூர் ரோட்டில் இந்தியன் ைஹவே மோட்டல் ஆகிய உணவகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த உணவகங்களை தவிர்த்த, பிற உணவகங்களில் அரசு பஸ்கள் நின்று சென்றால், பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.