நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : குண்டடம், செம்மையாகவுண்டம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அங்கு, ஒடிசாவை சேர்ந்த மனோரமா பாய், 21, கனகலடா பிரேகா, 41, படன் பிகரா, 46, பீஹாரை சேர்ந்த குன்னிமாஞ்சி, 45, நாடக்மாஞ்சி, 30 என, ஐந்து பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
வாகனத்தில் ஜல்லிபட்டியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வாகனம், நிறையூர் பிரிவு அருகே சென்ற போது, வளைவில் எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை திருப்பும் போது, ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது வாகனம் மோதி கவிழ்ந்தது. வடமாநில தொழிலாளர்கள், ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.