ADDED : பிப் 23, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், மூலனுாரைச் சேர்ந்தவர் சேகரன், 48; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்திற்கான பட்டாவை மாற்றம் செய்ய, மூலனுார் வி.ஏ.ஓ., சண்முகம், 45, என்பவரை அணுகினார்.
இதற்காக 5,000 ரூபாயை லஞ்சமாக சண்முகம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சேகரன், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., சண்முகத்திடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.