/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை ஏலத்தில் 53 விவசாயிகள் பங்கேற்பு
/
கொப்பரை ஏலத்தில் 53 விவசாயிகள் பங்கேற்பு
ADDED : மார் 30, 2025 10:44 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக, 172.36 ரூபாய் வரை விலை கிடைத்தது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 'இ-நாம்' திட்டத்தின் கீழ், வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. இங்கு நடந்த ஏலத்தில், 53 விவசாயிகளின், 7,500 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது.
இதில், முதல் தரம் கிலோ ரூ. 160 முதல் 172.36 வரையும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 90.26 முதல் 154.16 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஏலத்தில், 10 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு, விற்பனை கூடத்தை, 9443962834 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட விற்பனை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.