/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் கல்லுாரி மாணவியர் 6 பேருக்கு தங்கப்பதக்கம்
/
குமரன் கல்லுாரி மாணவியர் 6 பேருக்கு தங்கப்பதக்கம்
ADDED : அக் 12, 2025 12:13 AM

திருப்பூர்:கடந்த, ஏப்., மே மாதம் நடைபெற்ற கோவை பாரதியார் பல்கலை பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 6 மாணவியர் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பெற்றதுடன், அவர்கள் உட்பட, 34 பேர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களை கல்லுாரி தலைவர் செந்தில்நாதன், முதல்வர் வசந்திமற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவியர் லாவண்யா (பி.காம். கூட்டுறவு), ஸ்ரீமதி (பி.காம். சி.ஏ.), ஷபிதா (பி.எஸ்சி. கணிதம் சிஏ.), சுதா (எம்.காம். ஐபி.,), கஜஸ்ரீ (எம்.எஸ்சி. கணிதம்), சுவேதா (எம்.காம்.) ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.
மாணவியர் இந்துஸ்ரீ (பி.ஏ. ஆங்கில இலக்கியம்), வித்யாஸ்ரீ, லோகேஸ்வரி, கிருத்திகா (பி.காம். கூட்டுறவு), அபிராமி, ஸ்ரீகாயத்ரி, மித்ரா (பிபிஏ., ஷர்மிளா (பி.காம்); யோகபிரியா, ஹரிணி, (பி.காம். பிஐ.,), அபிராமி, ஸ்ரீவைஷ்ணவி, அபிரூபா, கனிகா, ரித்திகா (பி.காம். சிஏ.,), பாத்திமா பேகம், ரஸியாபேகம், துர்காதேவி, ஜமுனாஸ்ரீ, (பி.காம். பிஏ.,), சந்தானலட்சுமி (பி.எஸ்.சி. சிடிஎப்.); காவ்யா, கோபிகா(பி.எஸ்.சி. கணிதம் சிஏ.); சமீஹா (எம்.ஏ. ஆங்கிலம்), அனுபிரபா, சுபிட்சா, சுவாதி(எம்.காம். ஐபி.), இந்துமதி (எம்.எஸ்.சி. கணிதம்); ஆதிலட்சுமி (எம்.எஸ்சி. சி.எஸ்.,), ஸ்ரீசங்கரி, மஹா, நிதிஸ்ரீ (எம்.காம்.), கீர்த்தனா, சந்தியா,அனிஷ்பாத்திமா (எம்.காம். சிஏ.) ஆகியோர் முதல் தர வரிசையில் இடம் பெற்றனர்.