/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக மாணவர் சேர்க்கை 8 பள்ளிகளுக்கு பாராட்டு
/
அதிக மாணவர் சேர்க்கை 8 பள்ளிகளுக்கு பாராட்டு
ADDED : அக் 12, 2025 12:14 AM

திருப்பூர்:அரசு பள்ளியில் அதிகளவில் மாணவ, மாணவியரை சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுமென சட்டசபையில் அறிவிப்புவெளியிடப்பட்டது.
அவ்வகையில், 2024 - 25ம் கல்வியாண்டில், 50க்கும் அதிகமான மாணவ, மாணவியரை தங்கள் பள்ளியில் புதியதாக சேர்த்த திருப்பூர் ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடுமலை மாதிரிப்பள்ளி, கணக்கம்பாளையம், பொல்லிக்காளி பாளையம், சாமிக்கவுண்டம்பாளையம் (பல்லடம்) அரசு மேல்நிலைப்பள்ளிகள், உடுமலை, சின்னவீரம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய எட்டு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.