ADDED : ஜூலை 14, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று, 80 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன.
அணை மீன்களை விட, கடல் மீன்கள் அதிகமாக வந்தன. வஞ்சிரம், கிலோ 600 - 900, மத்தி - 150 - 250, கடல் பாறை - 450, டேம் பாறை - 180, விளா - 550, படையப்பா - 400, நண்டு - 350 - 550, இறால் - 360 - 460, நெத்திலி - 100- 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மொத்தம் 60 டன் மீன்கள், மதியம் 3:00 மணிக்கு முன்பே விற்றன. கடந்த மாதம் மீன் விற்பனை மந்தமானது. இந்த மாதம் தொடர்ந்து இரு வாரங்களாக மீன் விற்பனை ஜோராக இருப்பதால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.