/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெதப்பம்பட்டியில் 63 மி.மீ., மழை பதிவு
/
பெதப்பம்பட்டியில் 63 மி.மீ., மழை பதிவு
ADDED : நவ 25, 2025 05:48 AM
உடுமலை: உடுமலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெதப்பம்பட்டியில், 63 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
உடுமலை பகுதிகளில், கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில் - 22, அமராவதி அணைப்பகுதியில் -- 42, திருமூர்த்தி அணை - 16, மடத்துக்குளம் - 16, வரதராஜபுரம் - 46, பெதப்பம்பட்டி -- 63, நல்லாறு - 35 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
நேற்றும், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தொடர் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடுமலை நகரில் பெய்த மழை காரணமாக, ரோடுகளில் மழை நீர் தேங்கியிருந்தது. ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்தது.

