/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'சுயமரியாதையை சீண்டினாலும் திருந்த வழியில்லை': மக்களுக்கு விழிப்புணர்வு எப்போது?: குப்பை பிரச்னை தீரும் அப்போது!

'சுயமரியாதையை சீண்டினாலும் திருந்த வழியில்லை': மக்களுக்கு விழிப்புணர்வு எப்போது?: குப்பை பிரச்னை தீரும் அப்போது!

'சுயமரியாதையை சீண்டினாலும் திருந்த வழியில்லை': மக்களுக்கு விழிப்புணர்வு எப்போது?: குப்பை பிரச்னை தீரும் அப்போது!

'சுயமரியாதையை சீண்டினாலும் திருந்த வழியில்லை': மக்களுக்கு விழிப்புணர்வு எப்போது?: குப்பை பிரச்னை தீரும் அப்போது!

'சுயமரியாதையை சீண்டினாலும் திருந்த வழியில்லை': மக்களுக்கு விழிப்புணர்வு எப்போது?: குப்பை பிரச்னை தீரும் அப்போது!

UPDATED : ஜன 08, 2026 10:25 PMADDED : ஜன 08, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதி மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும், குப்பை மேலாண்மை என்பது மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்கு கூட, போதிய துாய்மைப் பணியாளர்கள் இல்லை. வாரம், 2, 3 முறை மட்டுமே, துாய்மைப் பணியாளர்கள், சுழற்சி முறையில் சென்று, வீடு, வீடாக குப்பை சேகரிக்கின்றனர்.

அதுவும், மக்கும் மற்றும் மக்காத குப்பை என, குப்பைகளை பிரித்தும் வாங்குவதில்லை. மொத்தமாக குப்பைகளை பேட்டரி வாகனங்களில் அள்ளிப்போட்டு, மயானம், நீர்நிலையோரம் உள்ளிட்ட ஒதுக்குப்புற இடங்களில் கொட்டி, தீ மூட்டி விடுகின்றனர். இப்படி தான், கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை நடந்து வருகிறது.இதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள், குப்பைகளை பாலிதீன் பைகளில் மூட்டையாக கட்டி, ரோட்டோரம் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். 2, 3 நாட்களில் அப்பகுதி முழுக்க குப்பை நிரம்பி, துார்நாற்றம் வீசத்துவங்கி விடுகிறது.

அதன்பின், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில்,'பொக்லைன்' வாகனம் ஏற்பாடு செய்து, ஒட்டு மொத்த குப்பையையும் அள்ளிச்சென்று, அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது; இதற்கு, கணிசமான தொகை செலவிடப்படுகிறது. எனவே, 'வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து வைத்து, வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்' என, ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டாலும், அது எவ்வித பலனையும் தருவதில்லை. ரோட்டோரம் மற்றும் கால்வாய்களில், குப்பைகளை வீசிவிட்டு செல்வது, மக்களின் வழக்கமான செயலாக மாறிவிட்டது.

இத்தகைய செயலை தவிர்க்க, குப்பை தேங்கி கிடக்கும் பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகள் சார்பில், 'இங்கு குப்பைக் கொட்டக் கூடாது; மீறினால் அபாரதம் விதிக்கப்படும்' என்ற எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்படுகிறது. அதனை மக்கள் துச்சமென கருதுவதால், அதற்கும் ஒரு படி மேலே போய், 'இங்கு குப்பைக் கொட்டுபவர்கள் மனித பிறவியே அல்ல' என்பது போன்று, சுயமரியாதையை சீண்டும் வகையில் அறிவிப்பு வைக்கப்படுகிறது. இருப்பினும், அந்த அறிவிப்பின் மீது மக்கள் குப்பை கொட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினரால் மட்டுமின்றி, ரோட்டோரம் குப்பைக் கொட்டுவதால் எழும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படும் குடியிருப்புவாசிகள் சார்பிலும் இத்தகைய பேனர்கள் வைக்கப்படுகின்றன.

தீர்மானங்கள் 'வேஸ்ட்' ஊராட்சிகளில் துாய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், தினசரி ஒவ்வொரு வீதியாக, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் அளவுக்கு துாய்மைப் பணியாளர்கள் இல்லை என்பது உண்மை தான். அதேநேரம், குப்பையை தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம், மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது போன்ற ஏற்பாடுகளும் இல்லை. ஆனால், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், திடக்கழிவு மேலாண்மை பணி நடக்கிறது என்ற போர்வையில், தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன; அதை, அரசும் நம்புகிறது. உண்மையில், கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை என்பது, 20 சதவீதம் கூட இல்லை என்பது தான் உண்மை. இதனை மாநில அரசு உணர வேண்டும். - ஊராட்சி நிர்வாகத்தினர்