/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி நாகமணி கற்கள் விற்க முயன்ற 7 பேர் கைது
/
போலி நாகமணி கற்கள் விற்க முயன்ற 7 பேர் கைது
ADDED : ஜன 30, 2025 11:39 PM
பல்லடம்:பல்லடத்தில், போலி நாகமணி கற்களை விற்க முயன்ற சம்பவத்தில், பெண் ஒருவர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்மாறன், 45, ஐயப்பன், 34, உதயசங்கர், 32, வெங்கடேஷ், 34, கும்பகோணத்தைச் சேர்ந்த விஜயகுமார், 37, திருவாரூரை சேர்ந்த ராஜாமணி, 39 ஆகிய ஆறு பேரும், கும்பகோணத்தில் தெரிந்த நபர் ஒருவரிடம், போலியான இரண்டு நாகமணி கற்கள் வாங்கினர். இவற்றை, உண்மையான கற்கள் என்று கூறி, விற்பனை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வாயிலாக, பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி சரண்யா, 35 என்பவரை தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாய் என்று சொல்லி விற்க திட்டமிட்டனர்.
இதற்காக, ஆறு பேரும் பல்லடத்தில் உள்ள லாட்ஜில் தங்கினர். இதுகுறித்த ரகசிய தகவல் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், போலி நாகமணி கற்களை பறிமுதல் செய்து, சரண்யா உட்பட ஏழு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

