/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் 7 டன் பாலிதீன் பறிமுதல்
/
ஒரே நாளில் 7 டன் பாலிதீன் பறிமுதல்
ADDED : டிச 05, 2025 07:50 AM

திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதி பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஏழு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கே.எஸ்.சி. பள்ளி வீதி மற்றும் அரிசி கடை வீதியில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் சிலவற்றில் பதுக்கி விற்கப்படுவதாக புகார் கிடைத்தது. மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பாலிதீன் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இருந்து, தடை செய்யப்பட்ட, நான்கு டன்; வீட்டில் பதுக்கி வைத்திருந்த, மூன்று டன் என, மொத்தம், ஏழு டன் பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த கடைகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள், பொங்குபாளையத்தில் உள்ள உலர் கழிவு மறுசுழற்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டு அரைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள, 4 மண்டங்களில், 143 இறைச்சிக் கடைகளில் இருந்து, 3,280 கிலோ இறைச்சிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பாலிதீன் பைகள்மேயர் கெடு மேயர் தினேஷ்குமார் கூறுகையில், ''பிளாஸ்டிக் இல்லா திருப்பூர் என்ற நி லையை எட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தடை செய்யப்பட்ட பாலிதின் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள், வரும், 15ம் தேதிக்குள் அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும்; எந்தவொரு கடையிலும் பாலிதீன் பை விற்க கூடாது,'' என்றார்.

