/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயங்காத ஆதார் மையம் : இந்திய கம்யூ. எச்சரிக்கை
/
இயங்காத ஆதார் மையம் : இந்திய கம்யூ. எச்சரிக்கை
ADDED : டிச 04, 2025 08:10 AM
திருப்பூர்: திருப்பூர், பி.என். ரோடு, நெசவாளர் காலனியிலுள்ள வடக்கு துணை தபால் நிலையத்தில் ஆதார் மையம் முறையாக இயங்காததை சுட்டிக்காட்டி, பல கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
தபால் நிலையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பூர் வடக்கு துணை தபால் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார்.
ஆதார் திருத்தப்பணிக்கு வரும் பொதுமக்கள் சிலருக்கு மட்டும் திருத்த பணிகள் மேற்கொண்டு, மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும் இதற்கு தனி பணியாளர் நியமிக்க வேண்டும் என்று கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
முடிவில், தனி பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தபால் துறையினர் பதிலளித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூ. கட்சியினர் தெரிவித்தனர்.
இதில், கட்சியின் இரண்டாவது மண்டல குழு செயலாளர் சசிகுமார் பங்கேற்றனர்.

