/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
72 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் 'பறக்கிறது' : விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரும்
/
72 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் 'பறக்கிறது' : விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரும்
72 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் 'பறக்கிறது' : விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரும்
72 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் 'பறக்கிறது' : விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரும்
ADDED : மார் 21, 2026 04:58 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ள, 72 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் வாயிலாக விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் பிரிவு (தபால்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிப்., மாதம் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில், எட்டு தொகுதிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 19 லட்சத்துக்கு 55 ஆயிரத்து, 283 வாக்காளர்கள் இருந்தனர். அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 3.22 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் 1.93 லட்சம் பேரும் வாக்காளர்கள் உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டாலும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், 18 வயதை கடந்தவர்கள் https://www.eci.gov.in/ ஆன்லைன் வாயிலாக புதிய பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்களின் பெயர்களை கொண்டு புதிய வாக்காளர் அடையாள அட்டை பிரிண்ட் செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவினர் மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல், கடந்த வாரம் வரை, மாவட்டத்தின் எட்டு தொகுதியில் இருந்தும், 72 ஆயிரத்து, 168 பேர் புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான, புதிய வாக்காளர் அட்டை அச்சிடப்பட்டு தபால் வாயிலாக அவரவர் முகவரிக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அச்சடிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். மார்ச் மாதத்தில் இதுவரை, 41 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வரும் மார்ச், 25 க்குள் அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் இணைய, மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் புதிய வாக்காளர்களாக நிறைய பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தேர்தல் நாளுக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்பு வரை தொடர்ந்து வாக்காளர் அடையா ள அட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் (தபால்பிரிவு) அலுவலர்கள் தெரிவித்தனர்.

