/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 25, 2025 06:51 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு உட்பட்ட பகுதியில், திருட்டு போன, மொபைல் போன்கள் குறித்து புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக, எஸ்.பி., உத்தரவின் பேரில், போலீசார் விசாரித்து வந்தனர்.
அவ்வகையில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரித்த போலீசார், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல மொபைல் போன்களை மீட்டனர்.
இந்த போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், 74 மொபைல் போன்களை எஸ்.பி., ஒப்படைத்தார். மேலும், மொபைல் போன்கள் காணாமல் போனால், உடனடியாக மக்கள் சி.இ.ஐ.ஆர்., என்ற போர்டலில் (https://ceir.sancharsaathi.gov.in) என்ற முகவரியில் அல்லது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்க வேண்டும். இது, மொபைல் போன்களை விரைவாக கண்டறிய மிகுந்த உதவியாக இருக்கும் என்று எஸ்.பி. தெரிவித்தார்.

