/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி பஸ் மோதியதால் கடைக்குள் புகுந்த வேன்
/
கல்லுாரி பஸ் மோதியதால் கடைக்குள் புகுந்த வேன்
ADDED : நவ 25, 2025 06:51 AM

திருப்பூர்: ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியை சேர்ந்த பஸ் மாணவ, மாணவியரை அழைத்து கொண்டு, நேற்று காலை தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தணிக்கை செய்ய சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தாராபுரம் - உடுமலை ரவுண்டானா சிக்னல் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது. இதனால், சரக்கு வேன், ரோட்டோரம் இருந்த சலுான் கடைக்குள் புகுந்தது.
இதில், கடையில் இருந்த சந்திரன், 68 என்பவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை, அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகாரின் பேரில், கல்லுாரி பஸ் டிரைவர் தாமரை செல்வன் மீது தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

