/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.78.34 லட்சம் மதிப்பீடு திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.78.34 லட்சம் மதிப்பீடு திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : மார் 15, 2024 12:52 AM
திருப்பூர்;குண்டடம் ஒன்றியத்தில், 78.34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன.
குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், புதிய திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமைவகித்தார். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், தேவணம்பாளையம் முதல் வீதியில், 7.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல்; 9.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காளிபாளையம் முதல் வீதியிலும்; 3.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நல்லுார் முதல் வீதி; 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேடம்புதுார் முதல் வீதியில் என கான்கிரீட் சாலை அமைத்தல்.
சுண்ணாம்பு மேடு ஆதிதிராவிடர் காலனியில் 16.59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு; குருக்கம்பாளையத்தில், 8.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை; 9.42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஓலப்பாளையத்தில் கதிர் அடிக்கும் களம்; 1.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ரேஷன் கடைக்கு கழிப்பிடம் கட்டுமான பணி என, மொத்தம் 78.34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். ஆரத்தொழுவு ஊராட்சி தலைவர் முருகன், குண்டடம் பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், சுரேஷ், உதவி பொறியாளர் லோகேஷ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

