/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரிமைத்தொகை கேட்டு 398 விண்ணப்பங்கள்
/
உரிமைத்தொகை கேட்டு 398 விண்ணப்பங்கள்
ADDED : ஆக 23, 2025 12:28 AM

அவிநாசி: அவிநாசி, மேற்குரத வீதி குலாலர் திருமண மண்டபத்தில் அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 6, 10, 11 மற்றும் 12வது வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். கமிஷனர் வெங்க டேஸ்வரன், அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
இதில், 16 அரசு சார்பு துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்பட்டன. நுாறுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிர் 398 பேர் மனு அளித்தனர்.
சாதி சான்று, பட்டா மாறுதல், பென்சன், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேஷன் கார்டில் திருத்தம் என பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர். பொதுமக்களிடமிருந்து 805 மனுக்கள் பெறப்பட்டது.