sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

37 பந்தில் 85 ரன்; அஜித்குமார் விளாசல்

/

37 பந்தில் 85 ரன்; அஜித்குமார் விளாசல்

37 பந்தில் 85 ரன்; அஜித்குமார் விளாசல்

37 பந்தில் 85 ரன்; அஜித்குமார் விளாசல்


ADDED : ஆக 25, 2025 12:28 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அப்துல் கலாம் நினைவு சுழற் கோப்பைக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், கடந்த 9ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. நிப்ட்-டீ கல்லுாரியுடன், 'தினமலர் நாளிதழ்' மற்றும் டெக்னோ ஸ்போர்ட் இணைந்து போட்டியை நடத்துகின்றன.

நேற்று நடந்த முதல் போட்டியில், தங்கமன் பேஷன்ஸ் - காஸ்மோ டெக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தங்கமன் அணி, 13.3 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 114 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய காஸ்மோ அணி, 12.4 ஓவரில், 44 ரன்னில் ஆட்டமிழந்தது; இந்த போட்டியில், 70 ரன் வித்தியாசத்தில் தங்கமன் அணி வெற்றிபெற்றது.

மற்றொரு போட்டியில், எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் - ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பில், 112 ரன் எடுத்தது; அடுத்ததாக பேட்டிங் செய்த ஷாஹி அணி, 77 ரன்னில் ஆட்டமிழந்தது.

மூன்றாவது போட்டியில், யுனிசோர்ஸ் டிரென்ட் - எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த யுனிசோர்ஸ், 15 ஓவரில் 7 விக்கெட் இழந்து, 119 ரன் எடுத்தது. அந்த அணியின் வீரர் ராஜ்குமார், 43 பந்துகளை எதிர்கொண்டு, 51 ரன் எடுத்தார். இவர், ஏழு பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இரண்டாவதாக பேட்டிங் செய்த யுனிசோர்ஸ், 15 ஓவரில், 7 விக்கெட் இழந்து, 107 ரன்னுடன் ஆட்டமிழந்தது; 12 ரன் வித்தியாசத்தில், யுனிசோர்ஸ் வெற்றிபெற்றது.

நான்காவது போட்டியில், ராம்ராஜ் காட்டன் - அனுகிரஹா பேஷன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அனுகிரஹா, 6 விக்கெட் இழப்புக்கு, 108 ரன் எடுத்தது. அணியின் வீரர் விஜய் ராஜா, 32 பந்துக்கு, 52 ரன் எடுத்து, ஆட்டமிழக்காமல் தொடர்ந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ராம்ராஜ் அணி, அதிர டியாக விளையாடி, 8.3 ஓவருக்கு, 2 விக்கெட் இழந்து, 109 ரன்னுடன் வெற்றியை வசப்படுத்தியது. வீரர் அஜித்குமார், 37 பந்துக்கு 85 ரன் குவித்து, அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

நேற்றைய போட்டியில், 22 பந்துககு 33 ரன் எடுத்து, தங்கமன் அணி வீரர் பிரகாஷ்; 53 பந்துக்கு 64 ரன் எடுத்த எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் அணி ராம்குமார்; 43 பந்துக்கு 51 ரன் எடுத்த யுனிசோர்ஸ் அணி வீரர் ராஜ்குமார்; 37 பந்தில் 85 ரன் எடுத்த ராம்ராஜ் காட்டன் வீரர் அஜித்குமார் ஆகியோர் ஆட்டநாயகன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us