/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேத்தனுார் நாயுடு தோட்டத்தில் 860 சந்தன மரக்கன்று நடவு
/
கேத்தனுார் நாயுடு தோட்டத்தில் 860 சந்தன மரக்கன்று நடவு
கேத்தனுார் நாயுடு தோட்டத்தில் 860 சந்தன மரக்கன்று நடவு
கேத்தனுார் நாயுடு தோட்டத்தில் 860 சந்தன மரக்கன்று நடவு
ADDED : நவ 28, 2024 06:21 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தை பசுமை பொங்கும் பகுதியாக மாற்றும் முயற்சியாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கிய பசுமை பயணத்தில், இதுவரை இரண்டு லட்சத்து, 84 ஆயிரத்து, 033 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேத்தனுாரில் உள்ள, பாலசுப்பிரமணியம், நரேந்திரனுக்கு சொந்தமான, பொங்கலுார் நாயுடு தோட்டத்தில், நேற்று முன்தினம் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது. திட்டக்குழுவினர் வழிகாட்டுதலுடன், மொத்தம், 860 சந்தன மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.