ADDED : மார் 16, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பதற்றமான சாவடிகள் குறித்த ஆய்வுகூட்டம், சட்டசபை தொகுதி வாரியாக நேற்று நடந்தது.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சவுமியா தலைமை வகித்தார். தேர்தல் அலுவலர்கள், போலீசார் இணைந்து, கடந்த தேர்தல்களின் அடிப்படையில், பதற்றமான, மிக பதற்றமான சாவடிகள் குறித்த பட்டியலை சமர்ப்பித்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் மட்டும், 17 மையங்களில் உள்ள, 95 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை; இவற்றில், 15 சாவடிகள் மிக பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. அங்கு, மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தாசில்தார் மகேஸ்வரன் விளக்கினார். இதேபோல், பல்லடம் தொகுதி மற்றும் அவிநாசி சட்டசபை தொகுதிகளுக்கான ஆய்வுக்கூட்டமும் நேற்று நடந்தது.

