/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருவழிப்பாதையாக சுருங்கிய 4 வழி சாலை
/
இருவழிப்பாதையாக சுருங்கிய 4 வழி சாலை
ADDED : நவ 18, 2024 06:24 AM
திருப்பூர் ; திருப்பூர், அவிநாசி ரோட்டில் எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதி, குமார் நகர், பெரியார் காலனி உள்ளிட்ட இடங்களில், சாலை கரடுமுரடாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள சிறு குழிகள், டூவீலர் ஓட்டிகளை நிலைகுலைய செய்கிறது.
அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் அளவுக்கதிகமாக ஆக்கிரமிப்புகள் உள்ளன; நான்கு வழிச்சாலை, இருவழிப்பாதையாக 'சுருங்கி' இருக்கிறது.
குமார் நகர், எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதி, திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம், அணைப்புதுார் உள்ளிட்ட இடங்களில், சாலையோர ஆக்கிரமிப்பால், பஸ்கள், நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது; இதனால், வாகனங்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருக்கிறது.
எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதியில் சிக்னலை ஒட்டியே பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், அங்கு பயணிகளை ஏற்ற பஸ்கள் நிற்கும் போது, சிக்னல் பகுதியிலேயே வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கிறது. திருப்பூரில் இருந்து திருமுருகன்பூண்டி இடைபட்ட பயணம் என்பது, கடினமானதாகவே வாகன ஓட்டிகளுக்கு இருக்கிறது.
இந்த சாலை பராமரிப்பு என்பது தேசிய நெடுஞ்சாலை வசமிருப்பினும், பாதுகாப்பு விஷயங்களில் மாநகர போலீசுக்கும் பொறுப்பு உண்டு.அதனடிப்படையில் திருப்பூர் மாநகர சாலைகளில் நெரிசல், விபத்து தவிர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை போன்று, திருப்பூர் - பூண்டி இடைபட்ட ரோட்டிலும், மாநகர போலீசார் மேற்கொள்ள வேண்டும்.