/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
6 செ.மீ., வளர்ந்த விரல் நகம்; அதில் ஒரு ரோஜாப்பூ ஓவியம்
/
6 செ.மீ., வளர்ந்த விரல் நகம்; அதில் ஒரு ரோஜாப்பூ ஓவியம்
6 செ.மீ., வளர்ந்த விரல் நகம்; அதில் ஒரு ரோஜாப்பூ ஓவியம்
6 செ.மீ., வளர்ந்த விரல் நகம்; அதில் ஒரு ரோஜாப்பூ ஓவியம்
ADDED : செப் 01, 2025 12:28 AM

பல்லடம்; பல்லடம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிபவர் ராஜா; இவர் தனது இடது கை கட்டைவிரலில் நீளமாக நகம் வளர்த்து அதில் ரோஜாப்பூ வரைந்து அசத்தியிருக்கிறார்.
அவர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நகத்தை பெரிதாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தேன். இருப்பினும், விடாமுயற்சியுடன் கடந்த சில ஆண்டுகளாக, 6 செ.மீ., நீளத்துக்கு நகத்தை நீளமாக வளர்த்துள்ளேன்.முதலில், நகத்தை நீளமாக, நேராக வளர்த்து, அதில், தஞ்சை கோபுரத்தை சித்திரமாக வரைய வேண்டும் என்பது எனது விருப்பம்.
ஆனால், நகம், நேராக வளராமல், வளைந்து நெளிந்தபடி வளர்ந்தது. தற்போது அதில், ரோஜாப்பூ வரைந்துள்ளேன். நீளமான நகத்தால், அன்றாட பணிகளை மேற்கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன.
இருப்பினும், இடையூறுகளை பொருட்படுத்தாமல், ஒரு பொழுதுபோக்காக நகத்தை வளர்த்து வருகிறேன். மேலும், நீளமாக வளர்க்கவும்முயற்சித்து வருகிறேன்.