sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இடம் மாறும் நுாலகம்! கலெக்டர் அலுவலகம் அருகில் அமைகிறது: ரூ.9 கோடியில் புதிய கட்டடம் கட்ட கருத்துரு

/

இடம் மாறும் நுாலகம்! கலெக்டர் அலுவலகம் அருகில் அமைகிறது: ரூ.9 கோடியில் புதிய கட்டடம் கட்ட கருத்துரு

இடம் மாறும் நுாலகம்! கலெக்டர் அலுவலகம் அருகில் அமைகிறது: ரூ.9 கோடியில் புதிய கட்டடம் கட்ட கருத்துரு

இடம் மாறும் நுாலகம்! கலெக்டர் அலுவலகம் அருகில் அமைகிறது: ரூ.9 கோடியில் புதிய கட்டடம் கட்ட கருத்துரு


UPDATED : நவ 28, 2025 05:49 AM

ADDED : நவ 28, 2025 05:39 AM

Google News

UPDATED : நவ 28, 2025 05:49 AM ADDED : நவ 28, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மைய நுாலகத்தை விரிவுபடுத்தி, மாற்று இடத்துக்கு மாற்றும் பணிகள் துவங்கியுள்ளதால், புத்தக வாசிப்பாளர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

திருப்பூர், பார்க் ரோட்டில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. 50 ஆண்டு முன் பொது நுாலகத்துறை நிறுவிய திருப்பூரின் முதல் நுாலகம் இது. தினமும், நுாற்றுக்கணக்கான வாசகர்கள், புத்தக ஆர்வலர்கள், முதியோர், புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்கின்றனர். போட்டித்தேர்வுக்கு தயாராகும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், 50 பேர் பயன் பெறுகின்றனர்.

மாவட்ட மைய நுாலகம் என்பதால், பொது நுாலகத்துறை சென்னையில் இருந்து அனுப்பி வைக்கும் புத்தகங்கள் இங்கிருந்து தான் எட்டு தாலுகா நுாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இடநெருக்கடி காரணமாக நுாலகமாக மட்டுமின்றி, புத்தக குடோனை போல் நுாலகம் செயல்படுவதால், தினசரி நாளிதழ், வாரம் இருமுறை, மாதாந்திர புத்தக வாசிப்புக்கு தினசரி வருவோர், முதல்தளத்தில் சிறிய இடத்தில் அமர வேண்டிய நிலை உள்ளது.

உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள், தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி எடுத்து படிக்க சிரமம் ஏற்படுகிறது. வயதானவர்கள் மாடி ஏறி சென்று, புத்தகம் எடுக்க சிரமப்படுகின்றனர். அத்துடன், நாளுக்கு நாள் நுாலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை உயரும் நிலையில், மாவட்ட மைய நுாலகத்தை இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பத்து ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் பின், எஸ்.பி. அ லுவலகம் அருகே, கோர்ட் எதிர்புறம் காலியாக உள்ள, 75 சென்ட் இடத்தில், மூன்று தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்ட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒன்பது கோடி ரூபாயில் புதிய நுாலகம் கட்ட கருத்துரு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இளைஞர்கள் எதிர்பார்ப்பு அனைத்து மாவட்ட நுாலகங்களிலும் 'வை-பை' வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போதுள்ள மாவட்ட மைய நுாலகத்தில், கணினி பற்றாக்குறையால், அறிவியல் பூர்வமான இணையதள சேவைக்கு வருவோர், இருக்கை காலியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. வார நாட்கள் மட்டுமின்றி, விடுமுறை நாட்களில் கூட கல்லுாரி மாணவ, மாணவியர், போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டுள்ள பலர் படித்து பயன் பெறுகின்றனர்.

கலெக்டர் அலுவலக ஆறாவது, ஏழாவது தளத்தில் வாரண்டா, அரங்குகளில் பலர் கீழே அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மைய நுாலகத்தை இடமாற்றி, விரிவுபடுத்திக் கட்டும் போதும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு புதிய நுாலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.






      Dinamalar
      Follow us