/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட டேக்வாண்டோ போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வம்
/
மாவட்ட டேக்வாண்டோ போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : நவ 28, 2025 05:40 AM

திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட டேக்வாண்டோ போட்டி, காலேஜ் ரோடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டரங்கத்தில் நேற்று துவங்கியது.
கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயபால் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். 14 வயது பிரிவில், 140 பேர்; 17 மற்றும் 19 வயது பிரிவில், 140, 50 என மொத்தம், 330 பேர் பங்கேற்றனர்.
மேலும் கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன், பாலசுப்பரமணியம் ஒருங்கிணைத்தனர். போட்டி நடுவர்களாக உடற்கல்வி இயக்குனர்கள் ஆனந்தன், தமிழ்வாணி, பாலகிருஷ்ணன், முரளி, ஜெய்கண்ணன், சுப்பரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இன்று மாணவியருக்கான மாவட்ட டேக்வாண்டோ போட்டி நடக்கிறது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற உள்ளனர்.

