/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மூளையை மழுங்கடிக்கும் போதை!'புத்தக வாசிப்பு காட்டும் சரியான பாதை: கல்லுாரி முகாமில் வெளிப்பட்ட கருத்து

ADDED : நவ 05, 2024 11:51 PM

திருப்பூர்; 'மூளையை மழுங்கடிக்கும் போதை பழக்கத்தில் இருந்து விடுபட, புத்தக வாசிப்பில் கவனம் செலுத்த வேண்டும்' என, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா கூறினார்.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி போதை பொருள் தடுப்புச்சங்கம் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு மற்றும் இலவச சட்ட உதவி குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நுண்ணுயிரியல் துறை தலைவர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமையுரை ஆற்றினார். பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் உதவி குறித்து, வக்கீல் தமயந்தி பேசினார். வக்கீல் சகாதேவன், இலவச சட்ட உதவி குறித்தும், அதனால் பயன் அடைபவர்கள் குறித்தும் விளக்கினார். மாவட்ட சட்டப்பணிகள்
ஆணைக்குழு செயலாளர் ஷபீனா பேசியதாவது:போதை என்ற சொல்லுக்கு, தன்னிலை மறத்தல் என்பது தான் அர்த்தம். போதை பொருள் நுகர்வு என்பது, கொஞ்சம், கொஞ்சமாக நம் மூளையை மழுங்கடித்து, தன்னிலையை மறக்க செய்து, தவறையே சரி என நிரூபிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விடுகிறது. இளம் தலைமுறையினர், குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இதில் அதிகமாக மாட்டிக் கொள்கின்றனர்.
அச்சம் கொள்ளும் அளவிற்கான குற்றங்களை கூட, சர்வ சாதாரணமாக செய்கின்றனர்.
இனிவரும் காலம், இதைவிட மோசமாக தான் இருக்கும். இளம் தலைமுறையினர் தங்களின் கவனத்தை, புத்தக வாசிப்பு போன்ற நல்ல பழக்கத்தில் திருப்பும் போது, தவறான வழிகளில் செல்ல மனம் இடமளிக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, குமரன் மகளிர் கல்லுாரியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார்.