/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் - ஈரோடு மாவட்டத்தை இணைக்க பாலம் அமைகிறது!
/
திருப்பூர் - ஈரோடு மாவட்டத்தை இணைக்க பாலம் அமைகிறது!
திருப்பூர் - ஈரோடு மாவட்டத்தை இணைக்க பாலம் அமைகிறது!
திருப்பூர் - ஈரோடு மாவட்டத்தை இணைக்க பாலம் அமைகிறது!
ADDED : ஜன 30, 2025 11:42 PM

திருப்பூர்: காங்கயம் பரஞ்சேர்வழி (திருப்பூர்) - பசுவப்பட்டி (ஈரோடு) இடையே நொய்யல் ஆற்றின் குறுக்கே, புதிய உயர்மட்ட பாலம் கட்ட எட்டு கோடி ரூபாய் கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், 50 கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்துடன், ஈரோடு மாவட்டத்தை இணைக்க, கனரக வாகனங்கள் பயணிக்க, ஐந்துக்கு மேற்பட்ட பாலங்கள் நொய்யலை ஆற்றை, கடந்து மறுகரைக்கும் செல்கின்றன. இருந்த போதிலும், வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், இரண்டு மாவட்ட எல்லைகளை இணைக்க மாற்று வழிகள் குறித்து, இருமாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அவ்வகையில், காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழியுடன் - ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி பகுதியை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், குருக்கள்பாளையம் - பூச்சிக்காடு வலசு, தப்பியங்காடு ரோடு பகுதி இணைந்து புதிய சாலை உருவாகும். தற்போது, சென்னிமலை ரோடு, நத்தக்காடையூர் மற்றும் ஈரோடு - காங்கயம் ரோடு வழியாக கனரக வாகனங்கள் சென்று வர முடியும் என்ற நிலை உள்ளது.
புதிய பாலம் அமையும் போது, திருப்பூர் மாவட்டத்துடன் ஈரோடு மாவட்டத்தை இணைக்க விரிவான வழித்தடம் கிடைக்கும். இதனால், 60 க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறுவர். போக்குவரத்தும் எளிதாகும்.
மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ், எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 மீ., துாரத்துக்கு புதிய பாலம் கட்ட நிர்வாக அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது.
கருத்துரு அனுப்பபட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன், பாலம் பணி துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். புதிய பாலம் உருவாகும் போது, இரு மாவட்டங்களை சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறுவர்,' என்றனர்.

