/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி - கோவை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
அவிநாசி - கோவை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
அவிநாசி - கோவை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
அவிநாசி - கோவை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : டிச 05, 2025 08:03 AM

அவிநாசி: அவிநாசி - கோவை மெயின் ரோட்டில், இரண்டாம் திட்ட குழாய் உடைந்து பல நாட்களாக, பல லட்சம் லிட்டர் நீர் வீணாக செல்கிறது.
ஓரிரு வாரங்கள் முன்பு சிறிய அளவிலான உடைப்பு ஏற்பட்டபோது அடைத்திருந்தால், இந்தளவு தண்ணீர் வீணாகாது. தற்போது பெரிய அளவில் அப்பகுதியில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. செடிகள் முளைத்து, அப்பகுதி வயல்வெளி போல காட்சியளிக்கிறது.
பல வணிக கடைகள் உள்ள பிரதான சாலை, சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால், வாகனங்களை நிறுத்துவதற்கும், பொதுமக்கள் நடைபாதையில் கடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். உடனடியாக குழாய் உடைப்பை சீராக்க வேண்டியது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களின் கடமை.