நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை தளி ரோட்டில் திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் சின்னார் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரோட்டில் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் திறந்த வெளியில் வெயில், மழையில் நிற்க வேண்டியதுள்ளது.
இங்கு நிழற்கூரை அமைக்க, மக்கள் பலமுறை நகராட்சிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.