/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காரில் வந்து கழிவுகளை கொட்டியவர் மீது வழக்கு
/
காரில் வந்து கழிவுகளை கொட்டியவர் மீது வழக்கு
ADDED : செப் 20, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வீராணம்பாளையம் ஊராட்சி பகுதியில், ஓட்டல் கழிவுகளை காரில் கொண்டு வந்து கொட்டிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கயம் அடுத்த வீராணம்பாளையம் ஊராட்சி பகுதியில், கடந்த, 18ம் தேதி, ஒரு காரில் ஓட்டல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்த அப்பகுதியினர் காரை மறித்து நிறுத்தினர்.
அதில் இருந்த நபர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அந்நபர்கள் மீது ஊராட்சி தலைவர் உமாநாயகி காங்கயம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், அவிநாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு, ராஜிவ்காந்தி மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.