/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீடிக்கும் கொண்டாட்டம்; எங்கும் மகிழ்ச்சி தித்திப்பு
/
நீடிக்கும் கொண்டாட்டம்; எங்கும் மகிழ்ச்சி தித்திப்பு
நீடிக்கும் கொண்டாட்டம்; எங்கும் மகிழ்ச்சி தித்திப்பு
நீடிக்கும் கொண்டாட்டம்; எங்கும் மகிழ்ச்சி தித்திப்பு
ADDED : ஜன 16, 2025 11:39 PM
திருப்பூர்: பொங்கல் விடுமுறை முடிந்தும், சொந்த ஊர் சென்றவர்கள், வார இறுதிநாளில் மட்டுமே ஊர் திரும்புவர் என்பதால், வரும், 20ம் தேதி தான், திருப்பூர் பழைய நிலையில் களைகட்டும்.
திருப்பூரில், உள்ளூரை சொந்த ஊராக கொண்ட மக்கள் தொகையை விட, இரு மடங்கு மக்கள், வெளியூர் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என, பல இடங்களிலும் வெளியூர்வாசிகள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.தீபாவளி, பொங்கல் பண்டிகை காலம் என்பது, அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்குகிறது; அதற்கு காரணம், கிடைக்கும் நீண்ட விடுமுறை தான். பொங்கல் பண்டிகை மூன்று நாள் தான் என்ற போதிலும், கடந்த, 11ம் தேதி சனிக்கிழமை துவங்கி, 19ம் தேதி ஞாயிறு வரை, 9 நாட்களை விடுமுறைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பொங்கல் விடுமுறைக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சொந்த ஊரை தொலை துாரங்களாக கொண்டவர்கள் வரும் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் தான், திருப்பூர் திரும்புவர்.சொந்த ஊரில் அப்பா, அம்மா, தங்கை, அக்கா என உறவுகளுடன் சங்கமிக்கும் குடும்பத்தினர், கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையை கூட வீணாக்காமல், அவர்களுடன் குதுாகலமாய் பொழுது போக்கி விட்டு வர வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதுதான் இதற்கு காரணம்.