/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றிகளை குவித்த சென்சுரி பள்ளி
/
வெற்றிகளை குவித்த சென்சுரி பள்ளி
ADDED : செப் 20, 2024 05:38 AM

திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில், சென்சுரி பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கம், சான்றிதழ் பெற்றனர்.
பத்தொன்பது வயது பிரிவு கூடைப்பந்தில் முதலிடம்; ஹாக்கி மற்றும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம், சதுரங்கத்தில் மூன்றாமிடம்.
பதிநான்கு வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, டேபிள் டென்னிஸ் இரட்டையர் மற்றும் ஹாக்கியில் முதலிடம், பெண்கள் பிரிவு ஹாக்கியில் முதலிடம், சதுரங்கம் மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம், 17 வயது ஹாக்கி, டேபிள் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடம்; ஹாக்கி மற்றும் கால்பந்தில் முதலிடம்; கூடைப்பந்தில் இரண்டாமிடம் பெற்றனர்.
இவை தவிர, தடகளப்போட்டிகளில், மும்முறை தடை தாண்டும் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டெறிதல், உயரம் தாண்டுதல், தத்தி தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல் என பல போட்டிகளில் இப்பள்ளி மாணவ, மாணவியர் அபார வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்று மாவட்ட அளவில் தகுதி பெற்ற மாணவ, மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், குணசீலன், கார்த்திக் பிரசாத், மாசாணம் ஆகியோரையும் பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.