/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணியில் நிறைவான சேவை அலுவலர்களுக்கு பாராட்டு விழா
/
பணியில் நிறைவான சேவை அலுவலர்களுக்கு பாராட்டு விழா
ADDED : பிப் 16, 2025 02:44 AM

அவிநாசி: அவிநாசி கிளை பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள நாடார் திருமண மண்டபத்தில், பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் அருணாசலம் ஆண்டறிக்கை வாசித்தார். பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
பாரத ஸ்டேட் வங்கி அவிநாசி கிளை முதுநிலை மேலாளர் ரகுபதிராஜாவின் சேவையை பாராட்டி 'சாதனைச் செம்மல்' விருது வழங்கியும், அவிநாசி வட்டார கல்வி அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் பவுல் குணசேகரன் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு அவரை பாராட்டியும், மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் நடராஜன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் சென்னியப்பன், அந்தோணிசாமி, சுப்பிரமணியம், ரங்கசாமி, அவிநாசி வட்டார கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுமதி, ஊத்துக்குளி, கோவை வட்டார பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர். பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுகளை பெற்ற பாரத ஸ்டேட் வங்கி அவிநாசி கிளை முதுநிலை மேலாளர் ரகுபதி ராஜா, வட்டார கல்வி அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் பவுல் குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்புரை வழங்கினர்.
விழாவை நாடார் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்தனர். நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.

